உள்ளாடையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. உள்ளாடைகள் விஷயத்தில் நாம் செய்யும் சில தவறுகள் நம்முடைய உடல் நலத்துக்கு கேடு வைப்பதாக மாறி விடுகிறது.
சிலர் போட்ட உள்ளாடையையே மீண்டும் மீண்டும் போடுவார்கள். அதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
சிலர் உள்ளாடையை துவைத்தும் சரியாக காய வைப்பது இல்லை. உள்ளாடைகளை மறைத்து காய வைப்பதால் வெயிலில் காயாத உள்ளாடைகளில் பூஞ்சை பக்டீரியா உயிருடன் இருக்கும் இதனால் உள்ளாடையில் பூஞ்சை, பாக்டீரியா வேகமாக வளரும். வெயிலில் உலர்த்தி பயன்படுத்துவது நல்லது.
சிலர் வியர்க்க வேலை செய்த பிறகு உள்ளாடைகளை மாற்றாமல் அப்படியே இருப்பார்கள். வியர்வை காரணமாக பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் செழித்து வளரும். இதனால் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சினையை பலர் தற்போது சந்தித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சிலர் மிக இறுக்கமான உள்ளாடைகள் அணிவார்கள். அதனால் சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் பிறப்புறுப்பு பகுதிக்கான ரத்த ஓட்டத்தையும் தடுத்து நிறுத்தும். அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படும்.
பெண்கள் பிறப்புறுப்பின் மீது நேரடியாக படும்படி மெல்லிய உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது கிருமிகளை நேரடியாக கொண்டுபோய் சேர்த்துவிடும்
வெளிநாட்டு குளிர் காலநிலைக்கு தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை நம்வெப்பவலய நாடுகிளில் பாவிப்பது உடல் பாதிப்பை உண்டாக்கும். எனவே காட்டன் துணயில் தயாரான உள்ளாடைகளை பாவியுங்கள்.
வெளிஆடை போல் உள்ளாடைகளும் மிக நேர்த்தியாக சுத்தமாக இருக்கவேண்டும். வெளிய தெரியாது என்பதால் பலர் பழய கிழிந்த உள்ளாடைகளை கூட பாவிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய சீர்கேட்டை உண்டாக்கும்.
#sextips
0 Comments:
Post a Comment